பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு நுண்பார்வையாளர்கள் பயிற்சி

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு நுண்பார்வையாளர்கள் பயிற்சி
X

சேலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

சேலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, சேலத்தில் உள்ள 1519 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து 276 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க 138 நுண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆகியோர் வாக்குப்பதிவு தினத்தன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கினர்.

Tags

Next Story