/* */

குடோனில் பதுக்கி வைத்த ரூ. 2.25 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்

சேலத்தில், குடோனில் பதுக்கி வைத்த சுமார் ரூ. 2.25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குடோனில் பதுக்கி வைத்த ரூ. 2.25 லட்சம்  புகையிலை பொருள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள். 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அன்னதானப்பட்டி காவல் துறையினர் கந்தப்ப காலனி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வாகனத்தில் புகையிலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினரை கண்டதும், ஊழியர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து குடோனுக்கு சென்ற காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 51 மூட்டைகள் கொண்ட 750 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு சுமார் 2.25 லட்சம் ஆகும்.

விசாரணையில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான இந்த குடோனில், மதன் என்பவர், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது