சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி

சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி
X

சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன், தான் வெற்றி பெற்ற கோட்டத்தில் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி ஆறாவது கோட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ. இராமசந்திரன், சேலம் மாநகர மேயராக தேர்வு செய்யபட்டார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்த ஆறாவது கோட்ட வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது கோட்டத்திற்கு உட்பட்ட கோரிமேடு, பாண்டியன் தெரு, ரத்தனபுரி குறுக்கு தெரு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று இனிப்புகள் வழங்கி உதயசூரியனுக்கு வாக்களித்தற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்த அவர், பொது மக்களின் குறைகளை தினந்தோறும் கேட்டறிந்து அதனை சரி செய்திட உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார்.

குறிப்பாக மாநகர மக்களின் முக்கிய அடிப்படை தேவைகளான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் குப்பைகள் அகற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மாநகர மேயருடன் திமுகவினர் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!