சேலத்தில் மாட்டு வண்டியில் சென்று பெட்ரோல் வாங்கிய காங்கிரஸ் கட்சியினர்

சேலத்தில் மாட்டு வண்டியில் சென்று பெட்ரோல் வாங்கிய காங்கிரஸ் கட்சியினர்
X

சேலத்தில் மாட்டு வண்டியில் சென்று பெட்ரோல் வாங்கிய காங்கிரசார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் சென்று பெட்ரோல் வாங்கினர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இதனை கண்டித்து சேலம் குரங்குசாவடி பகுதியில் தமிழ்நாடு காங்கிரசார் நூதன எதிர்ப்பை தெரிவித்தனர்.

காங்கிரஸ் தகவல் உரிமை சட்டத்துறை மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், கட்சியினர் மாட்டு வண்டியில் பெட்ரோல் பங்க் சென்று வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்கி தமிழகத்தின் அவல நிலையை எடுத்துரைத்தனர்.

மேலும் பெட்ரோல் விலை உயர்வால் இனிவரும் காலங்களில் மாட்டு வண்டியில் மட்டும்தான் பொதுமக்கள் செல்ல முடியும் நிலை உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்பாக மாட்டுவண்டியில் சென்று சாலையில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!