சேலம் மாநகராட்சியில் சிபிஎம், விசிக, தேசிய முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி பங்கீடு உறுதி

சேலம் மாநகராட்சியில் சிபிஎம், விசிக, தேசிய முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி பங்கீடு உறுதி
X

சேலம் மாநகராட்சி தேர்தலில் வார்டு பங்கீடு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். 

சேலம் மாநகராட்சி தேர்தலில் வார்டு பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம், விசிக,தேசிய முஸ்லீம் லீக் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளின் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்பட விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கட்சியினர் இடமும் அமைச்சர் கே என் நேரு தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டணி பேச்சு வார்த்தையில் சிபிஎம் கட்சிக்கு 24 மற்றும் 60வது டிவிஷன் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 44 மற்றும் 22 ஆகிய இரண்டு டிவிசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய முஸ்லிம் லீக் கட்சிக்கு 53 வது டிவிசன் ஒதுக்கீடு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!