சேலத்தில் ஒமிக்ரான் தொற்றால் இளம்பெண் ஒருவர் பாதிப்பு

சேலத்தில் ஒமிக்ரான் தொற்றால் இளம்பெண் ஒருவர் பாதிப்பு
X

சேலம் அரசு மருத்துவமனை.

ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டு 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் சூரமங்கலம் முல்லைநகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து கொரோனா பரிசோதனை கொடுத்த பின்னரே ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்பான முறையில் சேலம் வருகை தந்துள்ளனர். இதையடுத்து சேலத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில் இளம் பெண்ணிற்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார். ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ள நிலையிலும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture