சேலத்தில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சேலத்தில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

கள்ளக்காதலனுடன் இள்பெண் தற்கொலை செய்துகொண்ட இடம்.

சேலத்தில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சத்யா(23) என்பவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சத்யாவிற்கு அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு(27) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரைப் பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக சத்யா தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சத்யா கள்ளக்காதலன் விஷ்ணுவுடன் அம்மாபேட்டை பகுதியில் எஸ்வந்தரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story