8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில்  எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள், சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், கோரிமேடு தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை வழங்க வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும். மிகைநேர பணி நிலையான பணி நிரந்தரம் வழங்க வேண்டும், வேலையாள் இழப்பீடு சட்டங்கள் போன்ற தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.

Tags

Next Story