இந்தியாவிலையே வனப்பகுதி அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் மாறும்: வனத்துறை அமைச்சர்

சேலத்தில் வனத்துறை அமைச்சர் தலைமையில் வனத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வு குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்கப்படுகிறது. மனிதர்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டுறிந்து வருகிறோம். இதற்கான முறையான தீர்வு காணப்படும்.
மேலும் சில மலைப்பகுதிகளில் குடியேறி உள்ள மலைவாழ் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து காப்புகாடுகளில் உள்ள மக்களிடம் முறையாக விசாரணை நடத்தி எந்தெந்த பகுதிகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சினைகள் தீர்க்க முடியுமா அதை செய்து தருவதுதான் எங்கள் பணியாக உள்ளது.தற்போது தான் உண்மையான மக்களாட்சி நடக்கிறது விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வனப்பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் இல்லாவிட்டால் மனிதர்கள் வாழ முடியாத இடமாக மாறிவிடும். கோடிக்கணக்கான மரங்களை நடவு செய்யும் பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப் பகுதிகளை அதிகரித்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் 27 சதவீதமாக உள்ள வனப்பகுதிகளை 33 சதவீத வனமாக மாற்ற வேண்டும் அதற்கான முயற்சியில் தான் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீராஜ், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர்கள், வனத்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu