சேலத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

சேலத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இழுத்துச் சென்றனர்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி, சேலத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக இழுத்து சென்றனர்.

உடனடியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது