வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிதித்து சேதம்: சேலம் அருகே பரபரப்பு

வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிதித்து சேதம்: சேலம் அருகே பரபரப்பு
X
தீப்பிடித்து எரியும் லாரி.
கர்நாடகாவில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்த லாரி சேலம் அருகே தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்த லாரி சேலம் அருகே தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் என்பவர் கர்நாடகாவில் இருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு மன்னார்பாளையம் பகுதியில் விநியோகம் செய்ய சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கன்னங்குறிச்சியில் இருந்து மன்னார்பாளையம் செல்லும் பிரதான சாலையில் மோட்டாங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வைக்கோல் மீது மின் கம்பி உரசியதில் திடீரென தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீயானது விருவிருவென வாகனம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். இதில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான 180 கட்டு வைக்கோல் தீயில் எரிந்து சாம்பல் ஆகின. இந்த தீ விபத்து குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!