கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சிறப்பு பரிசுகள்: சேலம் மாநகராட்சி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சிறப்பு பரிசுகள்: சேலம் மாநகராட்சி
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

நாளை நடைபெறும் முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஊசி போட்டால் பரிசு ; மாநகராட்சி அறிவிப்பு;


சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 7வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (30ம் தேதி) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை 50,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும், குடும்பத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மாநகராட்சி சார்பாக "எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்" என்ற ஸ்டிக்கர் வழங்கப்பட்டு வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி இருப்பவர்களுக்கு நாளை நடைபெறும் முகாமிற்கான தடுப்பூசி சீட்டு வழங்கப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொண்டு முதல் தவணை செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் தேர்தெடுக்கப்படும் 10 பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பாக சிறப்பு பரிசும், மேலும் அதிக தடுப்பூசி பயனாளிகளை கண்டறிந்து முகாமிற்கு அழைத்து வரும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 பேருக்கு சிறப்பு பரிசும் வரும் திங்கட்கிழமை ( 01.11.2021 ) அன்று வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

எனவே, மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி பெருமுகாமிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தங்கள் பகுதியில் உள்ள தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

Tags

Next Story