குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த காவலர்கள் பணியிடை நீக்கம்

குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த காவலர்கள் பணியிடை நீக்கம்
X

விதிமுறைகளை மீறி குற்றவாளிகளை அவர்களின் உறவினர்கள் சந்தித்த காட்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த 7 பேரை பணியிடை நீக்கம் செய்த சேலம் போலீஸ் கமிஷனர்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை சேலம் ஆயுதப்படை காவலர்கள் நேற்றைய தினம் சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க அனுமதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்