சேலம் மாநகராட்சியில் இதுவரை பாமகவினர் 45 பேர் வேட்பு மனு தாக்கல்

சேலம் மாநகராட்சியில் இதுவரை பாமகவினர் 45 பேர் வேட்பு மனு தாக்கல்
X

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்களின் போது ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அருள்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை பாமக சார்பில் 45 பேர் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.

நகர்புர உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, அதன் வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதனடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிகளில் 60 கோட்டங்களிலும் வேட்பாளர்களை அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் வேகப்படுத்தியுள்ளது. இன்றுவரை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் மற்றும் அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் 45 பேர் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்களின் போது பாமக வேட்பாளர்கள் 10 பேர் ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த பணியை நகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அருள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளிடம் வேட்பாளர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்து அனைத்து பகுதிகளிலும் உள்ள வேட்பாளர்களை இரண்டு நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் செய்து நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்ற உடன் மக்களை வீடுவீடாக நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த தேர்தலில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பாமக வெற்றி பெறும் என்றும் பாமகவின் சாதனைகள் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகளை பெற உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!