சாராயம் காய்ச்ச எம்.சாண்டுக்கடியில் 2,700 கிலோ வெல்லம் கடத்தல்: 3 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட 2,700 கிலோ வெல்லம் மூட்டைகள்.
சேலம் மாவட்டம், கருமந்துறை மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயனபடுத்தப்படும் கப்பி வெல்லம், சேலம் மாநகர் பகுதியில் இருந்து கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீசார் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் அன்னதானப்பட்டி போலீசார் சந்தைபேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த டெம்போ சரக்கு வேனில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அந்த வேனில் வெல்லம் மூட்டைகளை அடுக்கி , அதன்பீது எம்.சாண்டு மணல் கொண்டு நிரப்பப்பட்டிருந்தது. தலா 30 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில் கப்பி வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2700 கிலோ கப்பி வெல்லத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சேலத்தில் இருந்து கருமந்துறை மலைக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து வெல்லத்தை கடத்திய வெள்ளிமலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(23), வெள்ளரிகாடு பகுதியை சேர்ந்த ஆதிராமன்(27) மற்றும் வெல்லம் விற்பனை செய்த சேலம் மூலைபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(27) ஆகிய 3 பேரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் அன்னதானப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து சூரமங்கலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu