சேலம் மாநகராட்சியில் இருக்கைகள் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்
சேலம் மாநகராட்சி வளாகத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும், 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த 60 மாமன்ற உறுப்பினர்களில் மேயர், துணை மேயர், மற்றும் 4 மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 22ஆம் தேதிக்கு பிறகு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மற்றும் மேயராகத் தேர்ந்தெடுக்கபட உள்ளவர்கள் பதவியேற்கவுள்ளனர்.
இதற்காக சேலம் மாநகராட்சி வளாகத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சின் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு மாமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியேக இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அறை முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கில் தற்போது மாமன்ற உறுப்பினர்கள் மேயர் , துணை மேயர் அமர்வதற்கான இருக்கைகளை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இருக்கைகள், ஒலிபெருக்கி மற்றும் அடிப்படை வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu