சேலம் மாவட்ட கோஆப்டெக்ஸில் தீபாவளிக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

சேலம் மாவட்ட கோஆப்டெக்ஸில் தீபாவளிக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு
X

சேலம் கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

சேலம் மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 7.10 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தூய பட்டுச் சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் என ஏராளமாக ரகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 4 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 3 கோடியே 18 லட்சம் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 7 கோடியே 10 லட்சம் அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!