சேலம் மாநகராட்சி அதிமுகவின் கோட்டையா? சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேட்டி

சேலம் மாநகராட்சி அதிமுகவின் கோட்டையா? சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேட்டி
X

 சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேட்டி.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. -சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேட்டி

சேலம் மாவட்டத்தில் தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியது. மாநகராட்சி பகுதியில் உள்ள 709 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேலம் மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்களிடையே தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார். அவரது கனவு இந்த தேர்தலில் தகர்க்கப்படும் என்றார். அவரது எண்ணம் இந்த தேர்தலில் பலிக்காது என்றும் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் எந்தவித இடையூறும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture