சேலம் காவல் துறையினரின் சிறப்பு யோகா பயிற்சி: 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலம் காவல் துறையினரின் சிறப்பு யோகா பயிற்சி: 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு யோகாசன பயிற்சி.

சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக நடைபெற்ற சிறப்பு யோகாசன பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாநகர காவல்துறையின் வடக்கு சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி சேலம் புது ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் யோகாசன ஆசிரியர் ஆனந்த முருகன் கலந்துகொண்டு மூச்சுப்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிரிப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசன பயிற்சிகளை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம் மாநகர வடக்கு சரக காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையில் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த யோகாசன நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகாசனத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு சரக துணை ஆணையர்கள் நாகராஜ், சரவணகுமர், முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!