சிலிண்டர் விபத்தில் வீடு இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்: சேலம் எம்பி

சிலிண்டர் விபத்தில் வீடு இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்: சேலம் எம்பி
X

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்.பி. பார்த்திபன். 

சிலிண்டர் வெடிப்பில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, சேலம் எம்.பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சேலம் கருங்கல்பட்டியில், ராஜலட்சுமி என்பவரது வீட்டில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

காயமடைந்த 13 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் பார்வையிட்டு, உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கோர விபத்தில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பத்தினருக்கு, நாடாளுமன்ற நிதியில் இருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் புதியதாக வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
the future of ai in healthcare