சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு
சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதால், மேயர் பதவிக்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ் வழங்கினார்.
சேலம் மாநகராட்சி மாமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமச்சந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் சான்றிதழ் வழங்கி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ராமச்சந்திரனுக்கு, சார்பில் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மாமன்ற உறுப்பினர்களும் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu