சேலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பணிநீக்கம்: சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்.
சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு சுகாதார பணியாளர் பணியிலிருந்து நீக்கிய எங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பொது சுகாதார அலுவலர் பிரபாகரன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் கடந்த 2019 ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது நோயை கட்டுப்படுத்த தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணிக்கு தமிழக அரசு 1646 பேர் பணியமர்த்தப்பட்டனர்.
பெருந்தொற்றின் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் உயிரை காப்பாற்ற கால நேரம் இல்லாது பணியாற்றி வந்த நிலையில் இன்று முதல் பணியிலிருந்து நீக்கியதாக தற்போது உள்ள அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், பணியிலிருந்து நீக்கியதற்கு சென்னையில் ஆர்பாட்டம் செய்தவர்களை கைது செய்த தமிழக அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் தற்போது சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் காலி பணியிடங்கள் இல்லை எனக்கூறி நீக்கியதை திரும்ப பெற வேண்டும், உடனடியாக நீக்கிய 1646 சுகாதார ஆய்வாளர்களை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், தமிழகம் முழுவதும் கூட்டமைப்பின் சார்பில் மிகப் பெரிய ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu