சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
கோட்டை அழகிரி நாதர் சுவாமி திருக்கோவில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு வைபவம்.
இந்துகளின் விரதவழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி, இதனையொட்டி அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுமான அருள் மிகு கோட்டை அழகிரி நாதர் சுவாமி திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் மிக விமர்சியாக கொண்டாட பட்டது.
அதிகாலை 5.15 மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜ அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார்.
இதனைத்தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த வருடம் போகி பண்டிகையும் சொர்கவாசல் திறப்பு வைபவமும் ஒரே நாளில் அமைந்தது சிறப்பு வாய்ந்தது ஆகும். கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்யதனர்.
திருக்கோவில் முழுவதும் காவல்துறையினர் பக்தர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என அறிவுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu