தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலம் கல்லூரி மாணவி

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலம் கல்லூரி மாணவி
X

பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள உள்ள சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஜனனி.

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பங்கேற்க உள்ளார்.

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவையொட்டி நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் ஒரே இந்தியா ஒற்றுமையான இந்தியா என்ற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜனனி பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் நடைபெறும் தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில் பாரதப் பிரதமர் முன்னிலையில் வரும் 8ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் பேச்சுப் போட்டியில் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில், சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயின்று வரும் மாணவி ஜனனி தமிழகத்தின் சார்பில் பங்கேற்கிறார்.

தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் குரலாய் பெண்களின் குரலாய் பாராளுமன்றத்தில் எனது உரை ஒலிக்கும் என மாணவி ஜனனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் மற்றும் ஆறுதல் பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!