சேலம்: 45 சாய, சலவைத் தொழில்சாலைகள் மூடப்பட்டு ரூ.1.50 கோடி அபராதம் வசூல்

சேலம்:  45 சாய, சலவைத் தொழில்சாலைகள் மூடப்பட்டு ரூ.1.50 கோடி அபராதம் வசூல்
X

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் திருமணிமுத்தாறு நீர் நுரையுடன் வெளியேறுவதை பார்வையிட்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

Salem dye and laundry factories closed and fined

சேலம் மாவட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றிய 45 சாய மற்றும் சலவைத்தொழில்சாலைகள் மூடப்பட்டு ரூ.1.50 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகச சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் பகுதி திருமணிமுத்தாற்றில் நுரைகள் மிதந்து செல்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் (02.07.20224) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதமைச்சர் இயற்கை வளங்களையும், நதிகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் பகுதி திருமணிமுத்தாற்றில் நுரைகள் நீரில் மிதந்து செய்வதை தடுக்கும் பொருட்டு அவர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாநகராட்சிப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இப்பகுதிகளில் -உள்ள சிறிய சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீராலும் திருமணிமுத்தாறில் மாசு ஏற்படுகிறது. இவ்வாறு கழிவு நீர்கள் இந்த ஆற்றில் கலந்துசெல்வதனால் ஆற்றுப்பகுதி ஓரங்களின் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் மாசு கலப்பது தாய்ப்பாளப் விஷம் கலப்பதற்கு சமம்.

இதனைத்தடுக்கும் வகையில் சேலம் மாநகராட்சியில் நாளொன்றுக்கு 98 MILD வீட்டு உபயோக கழிவுநீர் உற்பத்தி ஆவதை கத்திகரிப்பு செய்ய சேலம் மாநகராட்சியில் 4 இடங்களின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டும் தன்னுடைய இயக்கத்தை தொடங்கியுள்ளன, மற்ற 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் இயக்கத்திற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் கத்திகரிப்பு நிலையங்கள் முழுவீச்சில் செயல்படுவதன் மூலம் திருமணிமுத்தாற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த போது சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.530.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.சேலம் மாநகராட்சியில்90எண்ணிக்கையிலான சாய மற்றும்சலவைத் தொழிற்சாலைகளும்,25ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. வாரிய விதிமுறைகளை மீறி கழிவுநீரை சுக்திகரிக்கமல் வெளியேற்றி வந்த 45 எண்ணிக்கையிலான சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளுக்கும், 5 கையிலான ஜவ்வரிசி தொழிற்சாலைகளுக்கும் வாரிய தலைமை அலுவ மூடுதல் வழங்கப்பட்டு அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சாய பற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகளிடமிருந்து ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரினை சட்டவிரோதமாக ஆற்றில் கலந்து விடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளிப்பூங்கா அமைவதற்குள்ளாகவே திருமணிமுத்தாற்றில் மாசு ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

இந்த ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் , சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மாக கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர்கோபாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு