சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்க வந்த ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, குகை, லீபஜார், புதிய பேருந்து நிலையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, எலக்ட்ரானிஸ், பிளம்பிங், வெள்ளி உள்ளிட்ட கடைகளை வைத்து வியாபாரங்களை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் செவ்வாய்பேட்டையில் மளிகை கடை நடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வடநாட்டு நபர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்துவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் சிலர், இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
சுமார் ரூ.20 கோடி வரை பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu