கட்டுமான பொருட்கள் விலை உயர்வு: சேலத்தில் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு: சேலத்தில் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்கக்கோரி சேலத்தில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்கக்கோரி சேலத்தில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை கண்டித்து சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொறியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டு கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்கக் கோரி கோசங்களை எழுப்பினர்.

தொடர் விலை ஏற்றம் காரணமாக நடுத்தர மக்கள் சொந்தமாக வீடு கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் ஒப்பந்த பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கட்டுமான பொறியாளர்கள், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story