மூலப்பொருட்களின் விலை உயர்வு: சேலத்தில் சிறு குறு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மூலப்பொருட்களின் விலை உயர்வு: சேலத்தில் சிறு குறு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து சேலத்தில் சிறு குறு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறு குறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் சிறு குறு தொழிற்சாலைகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த கூடிய இரும்பு, அலுமினியம், காப்பர், காகிதம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமன்றி தொழிலாளர் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறி, விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இன்று நடைபெறும் சிறு குறு தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 10 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!