சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில், கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்.

தேர்தல் மதிப்பூதியம், செலவினங்கள் வழங்கக்கோரி, சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, இதுவரை மதிப்பூதியம் மற்றும் செலவினங்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு செலவின ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி தலைமையில், கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வருகின்ற 13,14 ஆம் தேதிகள் மற்றும் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!