சேலத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

சேலத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
X

சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற தாெழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

70 மாதகால பஞ்சப்படி உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்.

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி 70 மாதகால பஞ்சப்படி உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 85 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவது போல பஞ்சப்படி உடனடியாக வழங்க கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தற்போது அதனை நிறைவேற்றப்படாமல் உள்ளதை கண்டிப்பதாக கோரி தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 70 மாதகால பணியினை உடனடியாக வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அனைத்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அதனை நிறைவேற்ற திமுக அரசு தவறி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!