சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

73 ஆவது குடியரசு தினவிழா சேலத்தில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், சேலம் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் திறம்பட பணியாற்றிய காவல்துறையினருக்கு விருது வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு கொரோனா தொற்று மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா விடுப்பில் உள்ள காரணத்தினாலும் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா தேசியக்கொடியை ஏற்றினார். இதேபோன்று சேலம் மாநகராட்சி அலுவலக மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil