சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவி

சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவி
X

சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம் கருங்கல்பட்டியில் நேற்று முன் தினம் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 வயது சிறுமி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்ததோடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி விபத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 நபர்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகை ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று நேரில் வழங்கினார். இதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story