சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி

சேலத்தில்  வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி
X

சேலம் எம்ஜிஆர் நகரில் வீடு ஒன்றினுள் புகுந்த மழைநீர்.

சேலத்தில் பெய்து வரும் மழையால், சிவதாபுரம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலத்திலும் மழை பெய்து வருகிறது. சேலத்தில் தொடரும் மழையால், சிவதாபுரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், பனங்காடு, சேலத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், மழை நீர் புகுந்து, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதேபோல், சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளதால், வீடுகளிலேயே மக்கள் முடங்கி உள்ளனர். நேற்றும் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, பொதுமக்கள் பலர், விடிய விடிய தூங்க முடியாமல் அவதியுற்றனர். தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு துப்புரவு பணியாளர்கள் அப்பகுதிக்கு வரவில்லை என்று, பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்தனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!