சேலம் ஜவ்வரிசி ஆலையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

சேலம் ஜவ்வரிசி ஆலையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
X

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஜவ்வரிசி தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் சேலம் தனியார் ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் பொது நிறுவனங்களை அரசு அதிகாரிகள் கையாளும் முறை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் சேலம் செவ்வாய்ப்பேட்டை அருகிலுள்ள ராஜா ஜவ்வரிசி ஆலையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற பொது நிறுவன குழு சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசுக் கட்டுப்பாடு குறித்த அதிகாரிகளின் நடவடிக்கை குறித்தும் ஆலை உரிமையாளரிடம் கேட்டறிந்தனர்.

குறிப்பாக ஆலையில் மரவள்ளி கிழங்கு அரைக்கப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் ஜவ்வரிசி பதப்படுத்தப்பட்ட கழிவுநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப் படுகிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ். ஆர். ராஜா தலைமையிலான உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி,ஆர். டி. சேகர்,நிவேதா, முருகன்,எஸ். எஸ். பாலாஜி,திரு. ரூபி. மனோகரன், ஜெயக்குமார் சிறப்பு பணி அலுவலர் ராஜா குழு அலுவலர் ரவிச்சந்திரன் சார்புச் செயலாளர் வலர்வேந்தன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!