கூட்டுறவு வார விழாவையொட்டி 2,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூட்டுறவு வார விழாவையொட்டி 2,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

அகில இந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, 2082 பயனாளிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அகில இந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி சேலத்தில் 2082 பயனாளிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 68 ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் கூட்டுறவு துறை சார்பில் 2,082 பயனாளிகளுக்கு 15 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு