சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து  ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி அடுத்த அம்பாள் ஏரி தெருவில் மகேந்திரா பிக்-அப் சரக்கு வாகனத்தில் 20 மூட்டை ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அந்த வாகனத்தை சிறைப்பிடித்தனர்.

தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசி கடத்தபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரியும், ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

வாகனத்தை சிறை பிடித்தபோது அங்கிருந்த சிலர் தப்பியோடினார். பின்னர் வாகன ஓட்டுநர் சிவகுமார் என்பவர் மட்டும் பிடிப்பட்டார். இதனையடுத்து வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது தன்னுடன் இருவர் வந்ததாகவும் வாகனம் பிடிபட்டதும் அவர்கள் இருவரும் ஓடி விட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் ரேஷன் அரிசி, வாகனம் மற்றும் ஓட்டுநரை அன்னதானப்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story