சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி

சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி
X

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் "மக்களாட்சியை பாதுகாப்போம்" என்கிற தலைப்பில் மேட்டுதெருவில் இருந்து ஒற்றுமை அணிவகுப்பு பேரணியாக சென்று கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை அணிவகுப்பு பேரணி செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திட்டமிட்டபடி மேட்டு தெருவில் இருந்து பேரணியை துவங்கினர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் நீல வண்ண சீருடை அணிந்து அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். உடன் இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்