மருத்துவக் கல்லூரிகளை திமுக சொந்தம் கொண்டாடுவதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் கண்டனம்
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன்.
சேலம் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாநகர் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், அதிமுக உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்று வருகிறது. எவ்வித பிரச்சினையுமின்றி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு திமுக சொந்தம் கொண்டாட முடியாது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியினை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டனத்துக்குரியது எனவும் கூறினார்.
மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை கொள்ளை போன்ற வழக்குகள் அதிகளவில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். வேதா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காணவில்லை என்று தீபா குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu