சேலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

சேலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ரூ.10 லட்சம் பறிமுதல்
X

போலீசார் பறிமுதல் செய்த ரூ.10 லட்சம்.

சேலம் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி எல்லையான புதுரோடு பகுதிகள் வட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூபாய் 10 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் வந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் என்பவரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.10 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களுக்கும் தலா மூன்று குழுக்கள் என 12 குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!