சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை
X

குடியரசு தின விழாவையொட்டி சேலத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். காவல்துணை கண்காணிப்பாளர் சுப்ரமணி தலைமையில் 100 காவலர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

வழக்கமாக இதுபோன்ற ஒத்திகை மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்திலேயே நடகபெறும். தற்போது மைதானத்தின் ஒரு பகுதியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கலை நிகழ்ச்சிகளின்றி எளிமையாக குடியரசு தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
ai in future agriculture