சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 5 ஆண்டுக்குப் பின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 5 ஆண்டுக்குப் பின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம். 

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 5 ஆண்டுக்குப் பின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்டநாள் பிரச்சினைகள், கோரிக்கைகளை மனுவாக எடுத்து வந்து நேரடியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர்.

இந்த குறை தீர்க்கும் முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

குறிப்பாகச் சாலை வசதி சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களாக வழங்கினர். இங்குப் பொதுமக்களின் குறைகளைக் கணினி மூலமாகப் பதிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஒரை நாளில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தை அடுத்த கூட்டத்தில் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுமக்களின் பிரச்சினைக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்து அடுத்த முறை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்