சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பள்ளத்தில் விழுந்து ஒருவர் சாவு

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பள்ளத்தில் விழுந்து ஒருவர் சாவு
X

பள்ளத்திலிருந்து மீட்டகப்படும் இருசக்கர வாகனம்.

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் ஸ்டேட் பாங்க் காலனி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இதுகுறித்து நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில் சூரமங்கலம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் திருச்சி மாவட்ட வலையூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிவா என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai as the future