'ஒமைக்ரான்' பரவல்: அனைவரும் தடுப்பூசி செலுத்த ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

ஒமைக்ரான்  பரவல்:  அனைவரும் தடுப்பூசி செலுத்த  ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
X

மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன். 

‘ஒமைக்ரான்’ கொரோனா பரவல் உள்ளதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் வகையில் மாறுபட்டாலும் பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றுதான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு வழக்கமான பாதுகாப்பு நடவடிபழக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture