சேலத்தில் வடமாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

சேலத்தில் வடமாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!
X

மாதிரி படம் 

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் வட மாநில இளைஞர் ஒருவர் ரயில் பாதை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, லாரி மார்க்கெட் பின்புறம் உள்ள ரயில் பாதை அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அப்பகுதியில் சென்றவர்கள் அந்த இளைஞரின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் செவ்வாய்ப்பேட்டை சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையியிட்டனர். உடலைக்கைப்பற்றி போலீசார், சேலம் அரசு தலைமை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் இறப்பு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் அடையாளம் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் ஆகியவை தற்போது தெரியவில்லை. எப்படி இறந்தார் ? தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு எழும் கேள்விகள்

உயிரிழந்த இளைஞரின் வயது இன்னும் சரியாக தெரியவில்லை. அவரது விவரங்கள் ஏதேனும் காணாமல் போனவர்கள் புகாருடன் ஒத்துப்போகிறதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உடலில் காயங்கள் அல்லது தாக்குதலின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரிய வரும்.

அந்த இளைஞர் சேலத்திற்கு எதற்காக வந்திருந்தார்? பயணமாகவா அல்லது வேலை நிமித்தமா அல்லது உறவினர்களைப் பார்க்கவா என்பதும் தெரியவில்லை. அந்த இளைஞர் தனியாக இருந்தாரா அல்லது உடன் வேறு யாராவது இருந்தார்களா போன்ற எந்த விபரங்களும் தெரியவில்லை.

போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த இளைஞர் செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும். தற்கொலை என்றால் அவரது தற்கொலைக்கான காரணம் என்பது விசாரிக்கப்படவேண்டும்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ரயில் பாதைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவரின் அடையாளத்தையும் மரணத்தின் காரணத்தையும் கண்டறிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடைபெற்று வரும் விசாரணையில் இருந்து மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!