சேலம் அருகே இளைஞர் கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

சேலம் அருகே இளைஞர் கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(26). இவரது மனைவி ரம்யா. 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் திருணாவுகரசுவின் மாமனார் செந்தில்குமாரை சபரிமலைக்கு வழியனுப்புவதற்காக கடந்த 17 ஆம் தேதி இரவு வந்த போது 15 பேர் கொண்ட கும்பலால் கொடுரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சரவணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலையாளிகளை பிடிக்க ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடத்தின் போது ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு சரவணன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து திலீப்குமார் என்பவரை கொலை செய்தனர். அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாக திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் கௌதம்(21), பாலியான்(24), பாலாஜி(20), தமிழன்பன்(35), தங்கவேல்(34), குமரேசன்(32), அழகுமணி(22) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 9 பேர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நாழிக்கல்பட்டி விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட தகராறில் எனது நண்பர் திலீப்குமாரை திருநாவுக்கரசு மற்றும் சரவணன் வெட்டி கொலை செய்தனர் அதற்கு பழி வாங்குவதற்காகவே திருநாவுக்கரசை கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் வெளியூர் சென்றிருந்ததால் மீண்டும் திரும்பி வரும் வரை காத்திருந்ததாகவும், இந்த நிலையில் அவருடைய மாமனார் சபரிமலை கோவிலுக்கு செல்ல இருந்த நிலையில் வழி அனுப்பி வைப்பதற்காக வந்த திருநாவுக்கரசை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொலை செய்ய திட்டம் போட்டு அதன்படி தனியாகப் பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசு மற்றும் சரவணன் ஆகியோரை நாங்கள் சுற்றிவளைத்து கத்தி மற்றும் கல்லால் மாறி மாறி தாக்கினோம். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்துவிட்டார். என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

2019 திலீப்குமார் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த திருநாவுக்கரசு, சொந்த ஊரான நாழிக்கல்பட்டிக்கு செல்லாமல் அயோத்தியாபட்டணம் பகுதியில் தங்கியிருந்து வந்துள்ளார். இதையடுத்து ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து அயோத்தியபட்டினம் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார். மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திருநாவுக்கரசின் மாமனார் சபரிமலைக்கு வழியனுப்ப சென்றபோது வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!