சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடல் பாடலுடன் நடனமாடி மனு அளித்த நரிக்குறவர்கள்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடல் பாடலுடன் நடனமாடி மனு அளித்த நரிக்குறவர்கள்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நரிக்குறவ இன மக்கள்.

சேலத்தில் நரிக்குறவ இன மக்கள் ஆடல் பாடலுடன் நடனமாடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சேலம் பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் இனமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நரிக்குறவர் காலனி பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருவதாகவும் தங்களுக்கு அரசின் சார்பில் வழங்கும் உதவிகள் கிடைக்காமல் தவித்து வந்தனர். பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நரிக்குறவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.

தமிழக முதல்வர் சென்னையில் நரிக்குறவர் இன குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு பல்வேறு நல உதவிகளை செய்துள்ளார். தொடர்ந்து நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என நரிக்குறவ இன மக்கள் ஆட்டப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அரசு உதவிகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil