சேலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்பி நேரில் ஆய்வு

சேலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்பி நேரில் ஆய்வு
X

சேலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார்.

சேலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார்.

சேலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கும் தண்ணீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் சன்னியாசி குண்டு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள ராஜா நகர், காந்திநகர், கந்தசாமி நகர், மணல்காரர் தெரு ஆகிய பகுதிகளில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குடியிருப்புகளை சூழ்ந்து நின்ற தண்ணீரில் நடந்து சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மதிய உணவு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்கால நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தொடர் மழை நின்றபின் நிரந்தர தீர்வாக இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story