'மிஸ்டர் சேலம்' ஆணழகன் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மிஸ்டர் சேலம் ஆணழகன் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் நடைபெற்ற மிஸ்டர் சேலம் ஆணழகன் போட்டி.

சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் நடைபெற்ற ‘மிஸ்டர் சேலம்’ போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், மறைந்த சங்க தலைவர் வீரபாண்டி ராஜா நினைவாக 'மிஸ்டர் சேலம் ௨௦௨௧' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது.

போட்டியை சங்கத்தின் நிர்வாக துணைத்தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் மற்றும் சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இதில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியானது எடை, உயரம் மற்றும் வயது அடிப்படையில் 20 பிரிவுகளாக நடைபெற்றது. அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!