நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ

நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ
X

மேட்டு ஆண்டாள் தெருவில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு செய்யும் எம்எல்ஏ ராஜேந்திரன்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 29 கோட்டத்தில் மேட்டு ஆண்டாள் தெருவில் உள்ள நியாய விலை கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்களின் எடை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்துப் பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா குறித்து அந்த பகுதில் உள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!