பள்ளி குழந்தைகளுக்கு எம்எல்ஏ., ஆட்சியர், மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு
பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்பட்டன.முன்னதாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 1754 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. குறிப்பாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மணக்காடு பகுதியில் உள்ள துவக்கபள்ளியில் வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு மேளதாளங்கள் முழங்க விழா கோலம் பூண்டு இருந்தது.
இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் , சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் வந்திருந்து பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் முதலில் பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமிகளுக்கு பழங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி உற்சாகப்படுத்தினார் இதேபோன்று சிறுவர் சிறுமிகளின் பெற்றோர் களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோன்று பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டதுடன் அவர்களுடைய வெப்பம் கண்காணிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதனையடுத்து வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்கள் முதல் கட்டமாக மன உளைச்சலைப் போக்கும் வகையில் அவர்களிடம் கலந்துரையாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu